Skip to main content

அந்த ஒரு வினாடி

பாலை வெளியில்
கொட்டி தீர்க்கிறது
ஒளியை  நிலவு.
குளிர் கெட்டித்து
கிடக்கும் இரவு.
மனம் கிடந்து தவிக்கிறது
உன் துணையின்றி.
உன் பெயர்  மணக்கும்
இந்த உடல் எரித்த
சாம்பலில் முளைத்த
புற்களென
உன் பாதங்கள் தொட்டு
செல்லும் பாதையில் நான்.
கடும் கோடையின்
அனல் காற்றில்
மிதந்து வரும் சருகுகள்
கொண்டுவரும்
என் சாவின் செய்தி
உனை சேரும் வேளையில்,
விழிகளில் திரளும்
கண்ணீர் துளிகளை
மறைத்துக்கொள்ள உனக்கு
ஒரு வினாடி  தனிமை
கிடைக்கட்டும்.

Comments