நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது
திறக்க முடியா கதவை திறந்து பார்க்க
உடைக்க முடியா பூட்டை உடைத்து பார்க்க
கடக்க முடியா தொலைவுகளை கடந்து பார்க்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது
இயங்க மறுக்கும் வாகனத்தை
இயக்கி பார்க்க
அணிய முடியா ஆடையை அணிந்து பார்க்க
பொருத்தமில்லா காலணியை
பொருத்தி பார்க்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது
இழந்த காதலை
இழந்த காலத்தை
இழந்த செல்வத்தை
இழந்த இளமையை
இழந்த நட்பை
இழந்த உறவை
இழந்த நம்பிக்கையை
மீட்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது.
திறக்க முடியா கதவை திறந்து பார்க்க
உடைக்க முடியா பூட்டை உடைத்து பார்க்க
கடக்க முடியா தொலைவுகளை கடந்து பார்க்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது
இயங்க மறுக்கும் வாகனத்தை
இயக்கி பார்க்க
அணிய முடியா ஆடையை அணிந்து பார்க்க
பொருத்தமில்லா காலணியை
பொருத்தி பார்க்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது
இழந்த காதலை
இழந்த காலத்தை
இழந்த செல்வத்தை
இழந்த இளமையை
இழந்த நட்பை
இழந்த உறவை
இழந்த நம்பிக்கையை
மீட்க
நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது.
Comments
Post a Comment