நட்பின் மரணம்
நம் நட்பின்
மரணம் அறிவிக்கப்பட்டது.
நான் உடைந்து
போகிறேன்.
மற்ற
மரணங்களை போல்
அல்லாமல் அது
மௌனத்தால் மட்டுமே
சொல்லப்பட்டது
நாம் பிரிவோமென்று.
அதுவும் புன்னகையோடு.
அது என் இதயத்தில்
சத்தமில்லாமல்
எறியப்பட்ட ஈட்டி.
வஞ்சகத்தின் ஈட்டி
துரோகத்தின் ஈட்டி,
இதை விட கொடியது
அன்பின் ஈட்டி
இந்த
இதயத்தின்
அதிர்வுகளை எந்த
கணினிகளாலும்
கணிக்க முடிவதில்லை.
உண்மையில் நட்பு அது
மரணிக்கிறதா?
இல்லை அது
மறைந்து கொள்கிறது.
நம் நட்பின்
மரணம் அறிவிக்கப்பட்டது.
நான் உடைந்து
போகிறேன்.
மற்ற
மரணங்களை போல்
அல்லாமல் அது
மௌனத்தால் மட்டுமே
சொல்லப்பட்டது
நாம் பிரிவோமென்று.
அதுவும் புன்னகையோடு.
அது என் இதயத்தில்
சத்தமில்லாமல்
எறியப்பட்ட ஈட்டி.
வஞ்சகத்தின் ஈட்டி
துரோகத்தின் ஈட்டி,
இதை விட கொடியது
அன்பின் ஈட்டி
இந்த
இதயத்தின்
அதிர்வுகளை எந்த
கணினிகளாலும்
கணிக்க முடிவதில்லை.
உண்மையில் நட்பு அது
மரணிக்கிறதா?
இல்லை அது
மறைந்து கொள்கிறது.
Comments
Post a Comment